All Articles
முப்பரிமாண அச்சாக்கம்
தொழில்நுட்ப வளர்ச்சியானது அக்காலத்தை விட இக்காலத்தில் பெரும்புரட்சியை ஏற்படுத்துகின்றது. இப்புரட்சி காரணமாக தோற்றம் பெற்றதே முப்பரிமாண அச்சாக்கம் என்பதாகும்.
முப்பரிமாண அச்சாக்கம் என்பது எவ்வாறு கணினியில் வடிவமைத்த ஆவணங்களை அச்சுப் பதித்துப் பெற முடியுமோ அதே போல் ஒரு பொருளின் கூறுகளை மென்பொருளில் வரைய செய்யும் தொழில்நுட்பம் ஆகும்.
மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், புதுப்புது தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும், 1986ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த சக்ஹல் என்பவர் தான் முப்பரிமாண அச்சாக்கத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டீரியோலித்தோகிராபி முறையைக் கண்டறிந்தார்.
பொருட்களை உருவாக்குவதில் பிரபலமான 2 வழிமுறைகள் ஸ்கல்ப்டிங் மற்றும் சி.என்.சி என்னும் முறைகளாகும். ஸ்கல்ப்டிங் முறை என்பது சிற்பத்தை உருவாக்குவது போன்ற முறை. சி.என்.சி முறை என்பது கணினி கோடிங் மூலம் நமக்கு வேண்டிய வடிவங்களை உருவாக்குவது. இம்முறைகளிற்கு நேரம் அதிகமாகத் தேவைப்படும். மூலப்பொருட்கள் வீணாக்கப்படும். ஆனால் முப்பரிமாண அச்சாக்க முறையில் இவ்வாறான பிரச்சினைகளே இருக்காது.
தற்பொழுது இரும்பு போன்ற உலோகங்கள், பிளாஸ்டிக், மண் கலவை எனப் பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு முப்பரிமாண அச்சாக்கம் நடைபெறுகிறது. இம்முப்பரிமாண அச்சாக்கமான ஆபரணங்கள் தயாரித்தல், கார்கள் உற்பத்தி, இராணுவம் மற்றும் மருத்துவம் எனப் பல துறைகளில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
முப்பரிமாண அச்சாக்கத்தில் மிகப்பெரிய புரட்சி செய்து வருவது என்றால் அது மருத்துவத்துறை தான். கடந்த வருடம் மனிதனின் காதை முப்பரிமாண அச்சாக்கத்தில் உருவாக்கி சாதனை படைத்தனர். இது மட்டுமல்ல மனிதனின் ரோபோட்டிக் கைகள், கால்கள் கூட உருவாக்கப்படுகின்றன. சாதாரணமாக ஒரு பொருளைத் தயாரிப்பதை விடவும் முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் பொருளை தயாரித்தல் செலவு குறையும். பொருட்களின் தரத்தை உயர்த்த முடியும்.
முப்பரிமாண அச்சாக்கத்தின் நன்மைகள்
- நேரம் மீதப்படுத்தப்படும்.
- மனித வலுக் குறைவடையும்.
- வீண்விரயம் தடுக்கப்படும்.
- மிகவும் துல்லியமான வடிவமைப்பை உருவாக்கலாம்.
- புதிய புதிய ஆக்கங்கள் படைக்கப்படும்.
- வேலை இலகுவாக்கப்படும்.
மாணவ சமுதாயத்தை பொறுத்தவரையில் முப்பரிமாண அச்சாக்கத்தின் மூலம் படைப்பாற்றல்களும், ஆக்கத்திறன்களும் வளர்ச்சியடையும். அத்துடன் தொழில்நுட்பத் திறனும் வளர்ச்சியடையும்.
எதிர் காலத்தில் மனித வள ஆக்கங்கள் குறைவடைந்து முப்பரிமாண அச்சாக்கமே முன்னிலை பெறும்.
Raveendran Sathurshika
Grade 07